பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான தகவலில், 2015-16ஆம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் 11,13,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமானது கடன் இணைப்புடன் கூடிய மானியத் திட்டமாகும். புதிதாகச் சிறு தொழில் நிறுவனங்களை அமைப்பதும், அதன்மூலம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டமானது காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் வாரியம் மற்றும் மாவட்ட தொழில் துறை மையத்தின் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்/ பழங்குடியினர்கள்/ பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்குக் கிராமப்புறங்களில் 35 விழுக்காடு மானியமும், நகர்ப்புறங்களில் 25 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாகத் தொழில் துறைக்கு ரூ.25 லட்சமும், சேவைகள் துறைக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...