Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறுநீரக கற்களை கரைக்க வேண்டுமா?


நம்மில் பலர் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, மரண வேதனை அணுபவித்து, இதை குணப்படுத்த சரியான வழி எது என்று அறியாமல் தவித்து வருவதுண்டு. சிறுநீரக கற்களை உடனடியாக உடலில் இருந்து வெளியேற்ற, எந்த மருத்துவம் சிறந்தது, எந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த பதிப்பில் உள்ளது. ஆம், சிறுநீரக கற்களை வேகமாக கரைத்து, வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் சாறு குறித்தே நீங்கள் இங்கு படித்தறியப் போகிறீர். அப்படி எந்த சாறு சிறுநீரக கற்களை அத்துணை வேகமாக கரைக்கும் என்று யோசிக்கிறீர்களா? அதை பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் படிக்கப்போகிறோம்..
இந்த மேஜிக் சாறு குறித்து படித்தறியும் முன், சிறுநீரக கற்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.!
எதனால் உருவாகின்றன?
இந்த கற்கள் எதனால் உருவாகின்றன என்று ஆராய்ந்தால், ஒரு நாளைக்கு பருக வேண்டிய சராசரி நீரை பருகாமல் தவிர்ப்பதால் அதாவது 4 கிளாஸிற்கும் குறைவான நீர் அருந்துவதால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் மைக்ரைன் தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள், கால்சியம்,வைட்டமின் டி சத்திற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டாலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம்.
அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதை பிறப்புறுப்பிற்கு அருகே தீவிர வலி, இரத்தம் கலந்த சிறுநீர், வாந்தி, மயக்கம், குறைந்த சிறுநீர் வெளிப்படுதல், எரிச்சல் உணர்வு, அரிப்பு உணர்வு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் அறிய இயலும்.
பக்கவிளைவுகள்:
இச்சிறுநீரக கற்கள் உடல் எடை அதிகரிப்பு, டையேரியா, உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கற்களை உடலில் இருந்து நீக்க பாட்டி-வீட்டு வைத்தியமே சிறந்தது. இந்த கற்களை கரைப்பதன் மூலம், இவற்றை எளிதாக வெளியேற்றலாம். இந்தக் கற்களை கரைக்க உதவும் சாறு குறித்து அடுத்து பார்க்கலாம்.
மேஜிக் சாறு.!
சிறுநீரக கற்களை கரைக்கும் அந்த அற்புத மேஜிக் சாறு - கரும்பு சாறு. கரும்புச்சாறு கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல மருத்துவ குணங்களை கொண்டது; கரும்பு சாறில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
நன்மைகள்
இத்துணை சத்துக்கள் நிறைந்த கரும்புச்சாறை பருகுவதால், உடலுக்கு பற்பல நன்மைகள் கிடைக்கும். கரும்பு சாறு குடிப்பது உடல் உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது; குறிப்பாக கல்லீரலுக்கு தேவையான சர்க்கரை சத்து கரும்பு சாறில் இருந்து போதுமான அளவு கிடைக்கிறது.
மேலும் கரும்பு சாறு மஞ்சள் kaமாலை நோயை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. கரும்பு சாறு மஞ்சள் kaமாலை போன்ற பல உயிரைக் கொள்ளக்கூடிய நோய்களை மிக எளிதில், சீக்கிரமாக குணப்படுத்தி விடுகிறது.
உடனடி தீர்வு
சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டும் என முந்தைய பத்தியில் பார்த்திருந்தோம், அதன்படி கரும்புச்சாறினை தொடர்ந்து பருகுவதன் மூலமாக சிறுநீரக கற்களை எளிதில் குறைக்கலாம். ஆனால், இது ஒவ்வொருவரின் உடல் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆகையால், மருத்துவ ஆலோசனையுடன் இந்த சிகிச்சை முறையை, இந்த சாறை பருகுவது நல்லது. அவ்வப்போது பருகுவதால் அபாயமில்லை; ஆனால், கற்களை கரைக்க தொடர்ந்து பருவத்தில், ஒருமுறை மருத்துவ கலந்தாலோசிப்பு மேற்கொள்வது நல்லது.
பொதுவாக சிறுநீரக கற்கள் உடலின் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுபவை. ஆகையால், அவற்றை அதிக நீர் பருகுதல், குளுக்கோஸ் கலந்த நீர் பருகுதல் மற்றும் தொடர்ந்து கரும்புச்சாறு பருகுதல் மூலமாக எளிதாக, விரைவாக குணப்படுத்தலாம். கரும்புச்சாறு சிறுநீரக கற்களை நீக்குவதோடு, சிறுநீரகம் சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது.
பிற பயன்கள்
கரும்புச்சாறு பருகுவதை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமும் பரிந்துரைக்கிறது. ஏனெனில், சிறுநீரக கற்களின் பக்க விளைவாக கூடிய உடல் எடை மற்றும் இரத்த அழுத்தத்தை எந்த வித மாத்திரை மருந்தும் இன்றி விரைவாக குறைக்க இந்த சாறு உதவுகிறது. குண்டான தேகம் கொண்டவர்கள், உடல் எடையால் அவதிப்படுபவர்களும் அடிக்கடி அல்லது தொடர்ந்து கரும்புச்சாறு பருகுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.




1 Comments:

  1. பித்தப்பையில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்ற ஏதாவது மருந்துகள் உண்டா..?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive