அனைத்து வகை பள்ளிகளும்,
வரும், 31க்குள், எமிஸ் பதிவு பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் (எமிஸ்), பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் மாணவர்களின் பதிவு, புதிய மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், இதில் ஆண்டுதோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல், தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும், எமிஸ் பதிவு அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, முறையான, முழுமையான பதிவுகளை, பள்ளி தலைமையாசிரியர்கள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இப்பணிகள் அனைத்தையும், ஜூலை, 31க்குள் முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் பின், கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Panninaalum....
ReplyDelete