போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனம் சார்பில், இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கும், இந்தியன் வங்கிசுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபி பயிற்சியை ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.சுய வேலை வாய்ப்பில் ஆர்வமுள்ள, 10ம் வகுப்பு வரை படித்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடை நாள் வரும் 30ம் தேதி. பயிற்சி திட்ட பாடங்கள் ஸ்கில் இந்தியா பாட திட்டத்துடன் இணைக்கப்பட்டது. பயிற்சிகள் அனைத்தும் முழு நேர பயிற்சியாக அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் 240 மணி நேரம் (30 நாட்கள்).இந்நிறுவனம் மூலம், கடந்த 9 ஆண்டுகளில், 211 பயிற்சி வகுப்புகள் நடத்தி,5,755 இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சி துறை சிறந்த பயிற்சி நிறுவனமாக தேர்வு செய்து, முதல் பரிசு வழங்கியது.பயிற்சி காலத்தில் சுய தொழில் பயிற்சியுடன் தொழில் முனைவோர் பயிற்சியான (இ.டி.பி., பயிற்சி) சேர்த்து வழங்கப்படும். பயிற்சிக்கு பின் கடன் பெற ஆலோசனைகளும் அளிக்கப்படும். பயிற்சி மற்றும் பயிற்சிக்கு தேவையான பொருட்களுக்கான கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.


பயிற்சிகள் அனைத்தும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை முழு நேர பயிற்சியாக அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு,இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 258, லெனின் வீதி, குயவர்பாளையம் (மணிமேலை பள்ளி எதிரில்), புதுச்சேரி. தொலைபேசி 0413-2246500, மொபைல்போன் 7598266671 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...