501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், `ஜியோ மான்சூன் ஹங்காமா' என்னும் அதிரடி எக்சேஞ்ச் சலுகையை இன்று (ஜூலை 21) அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூட்யூப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட ஜியோவின் பிரத்யேக மொபைலை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.1500க்கு விற்பனையாகும் இந்த மொபைலுக்கு தற்போது `ஜியோ மான்சூன் ஹங்காமா' என்னும் அதிரடி எக்சேஞ்ச் சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 2017ஆம் ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த பழைய ஃபீச்சர் போனைப் பயன்படுத்துவோர் தற்போது அதனுடன் ரூ.501-ஐ கூடுதலாகச் செலுத்தி புதிய மாடல் ஜியோ போனை பெற்றுக்கொள்ளும் எக்சேஞ்ச் ஆஃபரை ஜியோ வழங்கியுள்ளது.
இந்த மான்சூன் ஹங்காமா சலுகையுடன் சிறப்பு ரீசார்ஜ் சலுகையையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.594க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 6 மாதங்களுக்கு இலவச டேட்டா சலுகையையும் ஜியோ வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த ஜியோ மான்சூன் ஹங்காமா சலுகையுடன் ரூ.101 கூடுதலாகச் செலுத்தினால் 6ஜிபி டேட்டா போனஸாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.99 விலையில் தனி சலுகை ஒன்றையும் வழங்கியுள்ளது. அந்தச் சலுகையில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகளின் மூலம் ஜியோபோன் பயனர்கள் தங்களது டெலிகாம் செலவில் கிட்டத்தட்ட 50% வரை சேமிக்க முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.

Share this

1 Response to "501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer!"

  1. கேணப்பய நாட்டில் கிறுக்குபய நாட்டாமை .......... என்னோமோ போங்கடா .......நல்லா இருப்பீங்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...