வேளாண் கலந்தாய்வு: 5,337 பேர் பங்கேற்பு: காலியிடங்கள் விவரம் இன்று தெரியும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் 5,337 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, காலியிடங்கள் குறித்த விவரம் வியாழக்கிழமை (ஜூலை 12) அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக் கல்லூரிகள், 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
சிறப்புப் பிரிவினர் உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தவிர 2,593 இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி 8,986 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 5,337 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் யார், யார் எந்தெந்தப் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறித்தும், காலியிடங்கள் உள்ளனவா என்பது குறித்த விவரங்களையும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட உள்ளது

Share this

0 Comment to " வேளாண் கலந்தாய்வு: 5,337 பேர் பங்கேற்பு: காலியிடங்கள் விவரம் இன்று தெரியும்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...