சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல்
கல்லுாரியில் நடந்த, பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில், அரசு,
தனியார் கல்லுாரி களில் உள்ள, 90 ஆயிரத்து, 64 இடங்களில், 9,521 மட்டுமே
நிரம்பின.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ.,
இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர, ஜூன், 30ல் துவங்கி, நேற்று வரை
கவுன்சிலிங் நடந்தது. 12 ஆயிரத்து, 21 பேர் விண்ணப்பித்தனர்.சிவில்
பிரிவுக்கு, ஜூலை, 1ல் கவுன்சிலிங் துவங்கியது. 2,150 பேர்
அழைக்கப்பட்டதில், 1,847 பேரும், மெக்கானிக்கல் பிரிவில், 4,800க்கு, 3,964
பேரும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், 4,123க்கு, 3,390
பேரும், பி.எஸ்சி., முடித்த, 12 பேரில், நால்வரும் சேர்க்கை ஆணை பெற்றனர்.
மொத்தம், 11 ஆயிரத்து, 447 பேர் பங்கேற்றதில், 9,521 பேர் சேர்க்கை ஆணை
பெற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...