Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யூட்யூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் செய்துகொண்ட பெண் உயிரிழப்பு!



திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் பனியன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
நல்ல வசதியான வாழ்க்கை மேற்கொண்ட இவர்களுக்கு ஹிமானி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் இயற்கை மருத்துவத்தின் மீது அலாதியான ஆர்வம் கொண்டவர்கள் இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பொருளாதாரம் மிகுந்த மற்றும் அதிக செலவை உருவாக்கக்கூடிய மருத்துவம் என்ற எண்ணம் இருந்து வந்தது. இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் பழக்கமானது கிருத்திகாவிற்கு ஏற்பட்டுள்ளது. 
லாவண்யா தம்பதியினரின் மகள் இயல்மதி சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லாவண்யா தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கும் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிருத்திகா. இதனை அடுத்து கார்த்திகேயன் கிருத்திகா  தம்பதியினர் இருவரும் பேசி வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்வதென முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் யூ டியூப் மூலமாக பல்வேறு சுகப் பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.
மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும்  முதல் மாதம் முதலே எந்தவிதமான மருத்துவமனைக்கும் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் கார்த்திகேயன் தம்பதியினர் கட்டாயமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கிருத்திகாவிற்கு வலி  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லாவண்யாவை போனில் அழைத்த கிருத்திகா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். 
மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும்  முதல் மாதம் முதலே எந்தவிதமான மருத்துவமனைக்கும் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் கார்த்திகேயன் தம்பதியினர் கட்டாயமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கிருத்திகாவிற்கு வலி  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லாவண்யாவை போனில் அழைத்த கிருத்திகா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். 
இதனையடுத்து கிருத்திகாவின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் பின்னர் மின்மயானத்தில் எரிப்பதற்கு மருத்துவரின் கடிதம் இல்லாத காரணத்தால் மின் மயானத்தில் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பிறகு கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி நல்லூர் ஊரகக் காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்தில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என எழுதிக்கொடுத்துள்ளார் . இதனை அடுத்து கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்தில் எரிக்கப்பட்டது. 
இது குறித்து கிருத்திகாவின் தந்தை கூறியதாவது, நான் பலமுறை அறிவுறுத்தியும் என் பேச்சை கேட்காமல் விபரீதம் செய்துகொண்டனர், இது தொடர்பாக நான் எந்த புகாரும் கொடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்து விட்டார். 
மேலும் பிரசவம் பார்க்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர் பூங்கோதை பேசியதாவது,  இயற்கை வைத்தியம் என்பது முறையான பயிற்சிகள் மேற்கொண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால்  மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று. ஆங்கில மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் என எந்தத் துறையானாலும் முறையான பயிற்சிகள் செய்யாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலும் விபரீதத்தை ஏற்படுத்தும்  நிலையில் முறையான பயிற்சிகள் இன்றி யூ டியூப் மூலம் வீடியோக்களை பார்த்து அதன் மூலம் பிரசவம் போன்ற மிக அதிக ஆபத்து மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது உயிரிழப்பு போன்ற கேடுகளையே  விளைவிக்கும் என தெரிவித்தார். 
விளையாட்டு முதல் சமையல் வரை என எல்லா விஷயங்களும் இணையம் மூலம் கற்றுக்கொண்டாலும் உடல் மற்றும் உயிர் சம்பந்தமான விஷயங்களில் மருத்துவர்களை அணுக வேண்டும் என்பது இச்சம்பவம் மூலம் உணரப்பட்டுள்ளது. 
இறந்த பெண்ணின் கணவர்  மற்றும் பிரசவத்தில் ஈடுபட்டோர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து காவல்துறை ஆலோசனை மேற்கொண்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive