''நீட் தேர்வு விவாகரத்தில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு
ஆதரவாக செயல்படுவோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின், 200வது
ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது.விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர்
பங்கேற்று, மருத்துவமனையின், 200வது ஆண்டு விழா கல்வெட்டை திறந்து
வைத்தார்.சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு, பதக்கங்களை வழங்கினார்.பின்,
அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:எழும்பூர் கண் மருத்துவமனையில், சர்வதேச
தரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 2.60 லட்சம் பேருக்கு,
கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில், 200வது ஆண்டு
விழாவையொட்டி, 50 லட்சம் ரூபாய் செலவில்,நினைவு நுழைவு வாயில்
அமைக்கப்படும். தமிழில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக
நாங்கள் செயல்படுவோம்.நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு நகல்
கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., எடுக்கும் நடவடிக்கையின்
படியே, தமிழக சுகாதாரத் துறையின் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...