பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க கோரி வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த
பகுதிநேர ஆசிரிய ர் திரு இரமேஷ் உள்பட  12 பகுதிநேர ஆசிரியர்களும் ,காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு  ஆற்றலரசு உள்பட 3 பகுதிநேர ஆசிரியர்கள் மே மாத ஊதியம் வழங்கிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று 16.07.2018 திங்கள்கிழமை மாண்புமிகு நீதியரசர் சத்ருகனா பூஜாரி அவர்களின் விசாரணைக்கு வந்த்து,பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு C செல்வராஜ் ஆஜராகி மத்திய அரசு மே மாத ஊதியத்திற்கு நிதி ஒதுக்கியபோதும் துறை அதிகாரிகள் வழங்க மறுத்து வருவதாக  வாதாடினார்,இதனை கேட்ட மாண்புமிகு நீதியரசர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலர் ,SSA மாநில திட்ட இயக்குநர் ஆகியோர் 25 ஆம் தேதி அன்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு  மே மாதம் ஊதியம் வழங்குவது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Share this

0 Comment to "பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க கோரி வழக்கு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...