பள்ளிகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பஞ்சாப் பெண்கள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் கல்வி மற்றும் பெண்கள் ஆணையத்தின்கூட்டம் நடைபெற்றது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாதத்திற்கு ஒருமுறை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கல்வித் துறைக்குப் பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வகுப்புகள் தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ அல்லது செயற்பாட்டாளா்கள் மூலமாகவோ நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து பஞ்சாப் பெண்கள் ஆணையத்தின் தலைவா் மனிஷா குலாட்டி கூறுகையில், 'மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், உடனடியாக நிர்வாகம் சரியான முறையைக் கையாண்டு, எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பெண்கள் ஆணையம் இதற்கென வகுக்கப்பட்ட நெறிமுறைகளை கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளது. மேலும், இந்த நெறிமுறைகளை பின்பற்றக்கோரி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளியின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments