கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

கேரளாவில் 1ம் வகுப்பு முதல்
10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை உள்ளன. முதற்கட்டமாக மலையாளம் தவிர்த்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பாட புத்தகங்களை கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உதவியுடன் வெளியிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் நிதியையும் பெற்றுள்ளது. அதனை பயிற்றுவிக்க மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட, தமிழ் தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.ஆனால் தமிழகத்தில் தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிடாமல், மத்திய அரசின் நிதியை வீணாக வேறு பணிகளுக்கு செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தேனி மாவட்டச் செயலாளர் சங்கீதா கூறுகையில், ''கம்ப்யூட்டர் அறிவியல் படித்துவிட்டு பணியில்லாமல் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்காமலும், தகவல் தொழில்நுட்பத்திற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமலும் உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கும் நிதியும் என்ன ஆகிறது எனத்தெரியவில்லை. கேரளா போல ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

Share this

0 Comment to "கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...