ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்களில்,
முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது நிரப்பப்பட உள்ளதால், மாணவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இன்று முதல், ஆக., 11 வரை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள, தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விபரங்கள், இணையதளத்தில் உள்ள, விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.ஒரு மாணவர், பல மாவட்டங்களில், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

Share this

0 Comment to "ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...