ஆசிரியர்கள், பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சிசேலம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி*
*சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஆசிரியர்கள், பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள்  பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது . இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ஞானகொளரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கருத்தாளராக மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க கன்வீனர் பிரபாகரன்  மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். இப்பயிற்சியில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் லியோ,மணிகண்டன், ஜோசப் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொற்றுநோய்களை தடுக்கும் முறைகள், பாம்பு  எப்படி பிடிப்பது, மின்சாரத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, தீயினை எந்தெந்த முறையில் அணைப்பது போன்ற பயிற்சிகளை பெற்றனர்

Share this