வாய்ஸ் மெசேஜுக்கு மாறும் லிங்க்டு இன்!
வாட்ஸ் அப், மெசெஞ்சர் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ் வசதி லிங்க்டு இன் செயலியிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான லிங்க்டு இன், தற்போது அதன் அடுத்த அப்டேட்டில் வாய்ஸ் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய வசதி இன்னும் சில வாரங்களில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு மேலாளரான ஜாக் ஹென்ட்லின் அவரது பிளாக்கில், "இந்தச் செயலியை பயன்படுத்துபவர்கள் நடந்து கொண்டே பேசும்படி அல்லது மற்ற வேலைகளைச் செய்து கொண்டே எளிதில் சாட் செய்யும்படி வாய்ஸ் மெசேஜ் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இனி பேச்சுகள் மூலம் எளிதில் உரையாடிக்கொள்ளலாம். உலகம் முழுதும் உள்ள லிங்க்டு இன் பயனர்களுக்காக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மட்டுமின்றி இணையதளத்திலும் இந்த வசதி இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் வெளியான அப்டேட்டில் மெசேஜ் கம்போஸ் பாக்ஸின் அளவைத் திருத்தும் செய்துகொள்ளும் வசதி, க்ரூப் சாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறிப்பிட `@' என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட சில வசதிகளை அறிமுகம் செய்திருந்தது. மேலும் ஐஓஎஸ் பயனர்களுக்கு நியூஸ் ஃபீட்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரையோ, வேலை செய்யும் இடத்தையோ `செர்ச்' ஆப்சனில் சென்று தேடாமல் க்யூ.ஆர் கோடை கொண்டு எளிதில் அணுகும் க்யூ.ஆர் கோடு வசதியை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this

0 Comment to "வாய்ஸ் மெசேஜுக்கு மாறும் லிங்க்டு இன்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...