இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை !

இந்திய வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து
வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வங்கிகளில் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிரேடு பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 166
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officers in Grade ‘B’ (DR) - General
காலியிடங்கள்: 127
தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officers in Grade ‘B’ (DR) - DEPR
காலியிடங்கள்: 22
தகுதி: Economics,  Econometrics, Quantitative Economics, Mathematical Economicsஸ, Integrated Economics Course, Finance போன்ற துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officers in Grade ‘B’ (DR) - DSIM
காலியிடங்கள்: 17
தகுதி: Statistics,  Mathematical Statistics, Mathematical Economics,  Econometrics, Statistics & Informatics,  Applied Statistics & Informatics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு குறித்த சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.35,150 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்டமான ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நிலை 1 தேர்வு(16.08.2018) மற்றும் நிலை 2 தேர்வு (06 மற்றும் 07.09.2018) தேதிகளில் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3503 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share this