பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம்
பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஆசிரியர்,
அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

Share this

2 Responses to "பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை"

  1. Yes இது போல பல இடங்களிலும் சில வருடங்களாக செய்யாமல் இருக்கிறார்கள்.இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகம் விபரங்கள் சேகரித்தால் உண்மை தெரிய வரும்.

    ReplyDelete
  2. Yes இது போல பல இடங்களிலும் சில வருடங்களாக செய்யாமல் இருக்கிறார்கள்.இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகம் விபரங்கள் சேகரித்தால் உண்மை தெரிய வரும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...