மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜூன் 22ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகச் சேர விரும்ப வேண்டுமானால், சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவேண்டும்.
அந்தவகையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ஒத்திவைத்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
அந்தவகையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ஒத்திவைத்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...