இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இனி பின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும். வானங்களில் முன்பக்க விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். அதேபோல் உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...