குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில்
சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
குரூப் 2ஏ தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோரில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.
6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர். பதிவேற்றம் செய்யப்பட்ட 6,171 விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 2 ,229 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்கள் வரும் 16 முதல் 23-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...