இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான,
'இக்னோ'வில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோவில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை, 'டிப்ளமா' உள்ளிட்ட வற்றை, தொலைநிலையில் படிக்க, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான கடைசி தேதி முடிய இருந்த நிலையில், ஜூலை, 31 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சி.ஏ., படித்து கொண்டிருப்போர், பி.காம்., மற்றும் எம்.காம்., சிறப்பு படிப்பிலும் சேரலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர், onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், சென்னை, வேப்பேரியில் உள்ள, மண்டல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், rcchennaiignou.ac.in என்ற இ- - மெயில் மற்றும் 044- 26618438/ 26618039 ஆகிய, தொலை பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...