NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Income Tax - IT returns தொடர்பான விளக்கங்கள்





நமது நண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.
அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை: 
✍மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும். 
✍ *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*. 
✍ ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 
✍ தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும். 

✍ சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும். 
✍ *அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது* 
✍ 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர். மேலும் ஒருசில ஊழியர்கள் 
✍ *சம்பளம் தவிர* Fixed Deposits,  Shares,  Mutual Fund  உள்ளிட்ட *பிற முதலீடுகள்* ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் *வட்டி, டிவிடென்ட்* போன்ற *ஆதாயத் தொகையும்* *26as படிவத்தில் update ஆகும்*. ✍ அந்த ஆதாயத் தொகைக்கான வரியையும் நாம் *தனியாக செலுத்த வேண்டும்* 
அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),  குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 *வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31* *கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.* 
Thanks
Mr.Rakshith
Treasurer, TNTF




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive