New Text Bookல இருக்கிற QR CODE VIDEOS
மாணவர்கள் மத்தியில் ரொம்பவே தேடலாகிக் கொண்டிருக்கிறது.Sixth std English bookல் ஒரு poem "THE CROCODILE ".இந்தப் பாடலைப் படமாக்கும் முயற்சியில் SCERT யின் வழிகாட்டுதலோடு தன்னார்வத்தோடு களமிறங்கினோம்.எந்த மாணவனாக இருந்தாலும் ஆங்கிலப் பாடல் எளிமையாகவும்,ஈர்ப்பாகவும் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமா அதற்கென மெனக்கெட்டோம்.
வடநெமிலி,தெற்குப்பட்டு பள்ளிகள்,திருப்போரூர் BEOக்கள்,ஞானசேகர் ஆசிரியர் இதற்கான ஆயத்த உதவிகளால் உடனிருந்தார்கள்.
திருப்பூர்,சேவூர் அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியை இவாஞ்சிலின் பிரிசில்லா அவர்கள் இப்பாடலுக்குத் தானே இசையமைத்துப் பாடி,நடித்தும் இப்பாடலைப் பலப்படுத்தினார்.இவரின் திறமையும்,அர்ப்பணிப்பும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இன்னுமொரு விடியலை இசையால் வெளிச்சமேற்றி
யிருக்கிறது.தொடரட்டும் புதியனவைகள்...வாழ்த்துகள்.
யிருக்கிறது.தொடரட்டும் புதியனவைகள்...வாழ்த்துகள்.
2000 முதலைகள் வரை வைத்துப் பராமரிக்கும் இந்தத் தொண்டு நிறுனத்தையும்,ஊழியர்களையும் நாம் பாராட்டாமல் இருந்து விட முடியாது.பார்க்காமலும் இருந்து விடக் கூடாது. ஒருமுறை உங்கள் குழந்தைகளோடு சென்று தான் பாருங்களேன்.
புதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள QR Code video தயாரிப்பிற்கு ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறோம்.தொடர்பு கொள்ளுங்கள்.
இப்பாடலைக் கேட்டவுடன் சில ஆறாம் வகுப்பு மாணவர்கள் உடனடியாகப் பாடுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. நீங்களும் கேளுங்கள். பயன் படுத்துங்கள்.உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
அன்புடன்...
அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்
Cell:
99944 45570
பாராட்டுக்கள்
ReplyDelete