ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர்
சாதனங்களில் நேவிகேஷன் அம்சங்களை மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் வழங்கும் மாலிகுலர் கடிகாரத்தை மசாசூட்ஸ் தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட அளவு மின்காந்த கதிர்வீச்சில் கணக்கிடப்பட்ட சுழலும் மாலிகுல்களை கொண்டு மாலிகுலர் கடிகாரம் சீராக நேரத்தை கணக்கிடுகிறது. என இயற்கை மின்சாரம் சார்ந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரத்தை சரியாக வைத்துக் கொள்ள பெரும்பாலும் அடாமிக் கடிகாரங்களே பயன்படுத்தப்படுகின்றன, எனினும் இவை அளவில் பெரியதாக இருப்பதோடு, விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. ஆய்வின் போது வழக்கமான அடாமிக் கடிகாரங்களுடன் ஒப்பிடும் போது மாலிகுலர் கடிகாரம் ஒரு மணிநேரத்தில் ஒரு நுன்விநாடிக்குள் பிழை காண்பித்தது.
இது ஸ்மார்ட்போன்களில் உள்ள வழக்கமான க்ரிஸ்டல்-ஆக்சிலேட்டர் கடிகாரங்களை விட 10,000 மடங்கு அதிக சீரான அளவு என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் அடாமிக் கடிகாரங்களுக்கு அதிகளவு செலவிட வேண்டிய அவசியம் இருக்க கூடாது என்பதே எங்களின் குறிக்கோள்," என எம்.ஐ.டி. பல்கலைகழகத்தின் மின்சாரம் பொறியியல் மற்றும் கணினியியல் துறையின் இணை பேராசிரியரும், ஆய்வின் துணை ஆசிரியர் ரியோனன் ஹன் தெரிவித்துள்ளார்.
"மேலும், ஸ்மார்ட்போன் சிப் பாகத்தின் ஒரு மூலையில் பொருத்தப்படும் சிறிய கேஸ் செல், அடாமிக் கடிகாரம் வழங்கக்கூடிய அளவில் சீராக இயங்க வைக்க முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சிப் வடிவ மாலிகுலர் கடிகாரத்தை கொண்டு குறைந்த அளவு ஜிபிஎஸ் சிக்னல் இருக்கும் இடம் துவங்கி முற்றிலும் ஜிபிஎஸ் சிக்னல் இல்லாத பகுதி மற்றும் நீருக்கு அடியில் அல்லது போர்களம் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மிகச்சரியாக லொகேஷனை காண்பிக்க பயன்படுத்தி கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...