சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி
அலுவலகத்தில் குரூப் 2ஏ பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் : வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வு 2 (குரூப் 2ஏ) (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான எழுத்து தேர்வை நடத்தியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 6,836 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
அவர்களின் மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டது. அதில் 6,171 பேர் மட்டும் மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர்
பதிவேற்றம் செய்யப்பட்ட 6171 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 2,229 பேரின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது
இதைத் தொடர்ந்து அவர்களை மட்டும் நேரடியாக சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து மூலச்சான்றிதழ்களை சரி பார்க்க தேர்வாணையம் முடிவு செய்யப்பட்டது
அதன்படி அவர்களுக்கு இன்று சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இன்று தொடங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 23ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...