சிந்தனையாற்றலுடன் செயல்திறன்மிக்க
மாணவர்களை உருவாக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு பயிற்சி தொடங்குகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:வகுப்பறை செயல்பாடுகளை மாற்றியமைத்து சிறந்த சிந்தனையாற்றலுடன் செயல்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மேம்பட்ட கற்றலுக்கு வழிவகை செய்யும் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் சார்பாக மாவட்ட கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பயிற்சி சென்னையில் நடக்க உள்ளது. 2வது கட்டமாக தொடக்கநிலை வகுப்புகளுக்கும் மாநில அளவிலான மாவட்ட கருத்தாளர் பயிற்சி வரும் 17ம் மற்றும் 20ம் தேதிகளில் நடக்க உள்ளது.இதற்கிடையில் மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களை மட்டுமே கருத்தாளர்களாக கொண்டு மாவட்டங்களில் ஒன்றிய அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் நடத்த வேண்டும். இந்த பயிற்சியும் 2 நாட்கள் நடத்த வேண்டும்.பயிற்சியை திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களில் ஒரு சுற்றும், புதன் வியாழன் ஆகிய இரு நாட்களில் மற்றொரு சுற்றும் என தொடர்ந்து நடத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சியினை 2வது பருவத்தேர்வு நாட்களிலும் தொடர்ந்து நடத்திட ஏதுவாக தலைமையாசிரியர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது ஒரு ஒன்றியத்தில் ஒரு பாடம் வீதம், 5 ஒன்றியங்களில் இப்பயிற்சியினை தனித்தனியாக பாடவாரியாக நடத்த வேண்டும். ஒரு சுற்றிற்கு ஒரு பாடத்திற்கு 50 ஆசிரியர்கள் என எண்ணிக்கையில் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களில், ஒன்றியங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பயிற்சியினை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் தக்க நடவடிக்கையினை சூழலுக்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தது.
நன்று
ReplyDelete