நாடு
முழுவதும், அவசர உதவிக்கு, '112' என்ற எண்ணை அழைக்கும், மத்திய அரசின்
திட்டம், தமிழகத்தில், வரும்மார்ச்சில் நடைமுறைக்கு வருகிறது.போலீஸ்
உதவிக்கு, 100; ஆம்புலன்ஸ் தேவைக்கு, 108; குழந்தைகளுக்கு உதவிட, 1098;
மூத்த குடிமக்களுக்கு, 1253; தீயணைப்பு வாகனத்தை அழைக்க, 101 என, ஏராளமான
அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதனால்,பொது மக்களிடம் குழப்பம் நீடிக்கிறது.இந்த அழைப்புகளை கையாள்வதில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு பணிச்சுமையும், செலவும் அதிகமாகிறது. இதனால், மத்திய அரசு, நாடு முழுவதும், அவசர உதவிக்கு, 112 என்ற, ஒரே எண்ணை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில், '112' எண்ணின் செயல்பாடு, மார்ச்சில் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:அவசர உதவிக்கு, அமெரிக்காவில், 911; ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், 112 என்ற, எண்ணில் அழைத்தால் போதும்; அனைத்து உதவிகளும் கிடைத்து விடும்.அதேபோல், நம் நாட்டிலும், அனைத்து அவசரஉதவிகளுக்கும், 112 எண்ணில் அழைத்தால் கிடைக்கும் வகையில், மத்திய அரசு திட்டம்தீட்டியுள்ளது.
தமிழகத்தில், ஏற்கன வே, அவசர உதவிக்கு, போலீசாரை, 100 என்ற, எண்ணுக்கு அழைக்கும் வசதி உள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்புக்கு, 'காவலன் - எஸ்.ஓ.எஸ்., மற்றும் காவலன் டயல் -- 100' என்ற, 'மொபைல் ஆப்'களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.இதற்காக, சென்னை எழும்பூரில், 11.43 கோடி ரூபாயில், கணினிமயமாக்கப்பட்ட, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, 112 என்ற எண்ணுக்கு அழைத்தாலும், இந்த மையத்தில் இருந்து, அழைப்புகளை கையாள, வசதி செய்யப்பட்டு உள்ளது.
மொபைல் போனில், 'சிம் கார்டு' இருந்தாலும், இல்லாவிட்டாலும்; சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 112 எண்ணிற்கு அழைத்தால் போதும். 'பவர் பட்டனை' மூன்று முறை அழுத்தினாலும் போதும்.சாதாரண மொபைல் போனில், 5 அல்லது, 9 என்ற எண்களை, தொடர்ந்து அழுத்தினாலே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அழைப்பு சென்று விடும். தமிழகத்தில், 112 என்ற எண்ணில் அழைக்கும் முறை, வரும் மார்ச்சில் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...