.
இது குறித்து ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் டிச.14 முதல் 16-ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை அண்டம் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது.
இந்த வகுப்பில் அறிவியலில் ஆர்வம் கொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் கலந்து கொள்ளலாம்.
இப் பயிற்சி வகுப்பில் அண்டம் குறித்த கலந்தாய்வு, கைவேலைகள், மாதிரி காட்சிகள், தொலை உணர்வி பார்வையிடல், திரைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். இந்தப் பயிலரங்கில் பங்கேற்க முன்பதிவுசெய்ய வேண்டும். கட்டணம் ரூ.500. மேலும் விவரங்களுக்கு www.
taralaya.org என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...