ஜெருசலேம் புனித பயணம்
மேற்கொள்ள விரும்புவோர் தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசு, நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிறிஸ்துவர்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றைwww.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...