தொலை தூர ரயில்கள் ஒவ்வொரு 300 கிமீ முதல் 400 கி.மீ தூரம் சென்றதும் ஒருமுறை தண்ணீர் நிரப்பப்படும். கழிவறைகளிலும், பெட்டிகளில் உள்ள குழாய்களிலும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள தண்ணீர் தொட்டியும், 1,800 லிட்டர் கொள்ளவு கொண்டது. 24 பெட்டிகள் உள்ள ரயிலில் தண்ணீர் நிரப்ப சுமார் 20 நிமிடங்களாகும். பல ரயில்களில் தண்ணீர் விரைவில் தீர்ந்து விடுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான புதிய முறை வரும் மார்ச் மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. தண்ணீர் நிரப்ப அதிக சக்தி வாய்ந்த 40 குதிரை திறன் சக்தியுள்ள மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது. கணினி தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘எஸ்சிஏடிஏ’ முறையில் தண்ணீர் நிரப்பும் உபகரணங்கள் செயல்படும். இதனால், ரயில் பெட்டிகள், 5 நிமிடத்தில் நிரம்பும். பல ரயில்களுக்கு ஒரே நேரத்தில் நீர் நிரப்ப முடியும். இந்த புதிய முறை நாடு முழுவதும் 142 ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரயில்வே ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...