இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கான நாட்டில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்திய கல்வி மேம்பாட்டுச் சங்கம் என்ற தேசிய அளவிலான அமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் தற்போதைய தலைவராக வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த சங்கத்தின் 9-ஆவது தேசிய கருத்தரங்கம் பெங்களூருவில் அண்மையில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வியின் தரம், கட்டமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சங்கத்தின் தலைவர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் ஏஐசிடிஇ தலைவர் அணில் சகரஸபுத்தே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், தேசிய கல்வி கொள்கை வடிவமைப்பு குழு உறுப்பினர் எம்.கே.ஸ்ரீதர், கர்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஆகியோர் கெüரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சங்கத்தின் 9-ஆவது ஆண்டு பொதுக் குழு மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் வேந்தர்கள், துணைவேந்தர்கள், தலைவர்கள், முதல்வர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 2018-19-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், சங்கத்தின் மாற்று தலைவராக பிஐஎம் டெக் இயக்குநர் எச்.சதுர்வேதி, துணைத் தலைவர்களாக பெங்களூரு ராமைய்யா கல்வி குழுமங்களின் தலைவர் எம்.ஆர்.ஜெயராமன், நாக்பூர் தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இணைவேந்தர் வேதபிரகாஷ் மிஸ்ரா, பொருளாளராக பரிதாபாத் மணவ் ரச்சனா கல்வி குழுமத் தலைவர் பிரசாந்த் பல்லா ஆகியோரும், சங்கத்தின் மேலாண்மை குழு உறுப்பினர்களாக புணே எம்ஐடி ஏடிடி பல்கலைக் கழக நிர்வாகத் தலைவர் மங்கேஷ் டி.கரத், பஞ்சாப் சண்டிகர் பல்கலைக் கழக வேந்தர் எஸ்.சத்னாம் சிங் சாந்து, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.மலர்விழி, கொல்கத்தா ஜேஐஸ் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் தரன்ஜித்சிங் ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...