பிளஸ் 1 ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவ பாடத்திட்ட பயிற்சி
முகாம், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. புதிய
பாடத்திட்டத்தின் கீழ், இரண்டாம் பருவ பாடத்துக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. அதன்படி, தர்மபுரியில் தாவரவியல் ஆசிரியர்களுக்கு
பயிற்சிகள் துவங்கின. முகாமை, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்
ஹேமலதா துவக்கி வைத்தார். முதன்மைக் கருத்தாளர்கள் வாசுதேவன்,
சவுந்திரராஜன், தமிழ்செல்வன் பயிற்சியளித்தனர். கியூ.ஆர்., கோடு மூலம்
மாணவர்களுக்கு, எளிய முறையில் பயிற்சி உட்பட பல்வேறு வகையான பயிற்சிகள்
அளிக்கப்பட்டன. இதில், 98 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 104 தாவரவியல்
ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.
TET Study Materials
Home »
» பிளஸ் 1 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...