இறகுபந்து போட்டி: மாணவிக்கு பாராட்டு

தேசிய இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூர் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

'எஸ்.ஜி.எப்.ஐ.,' சார்பில் தேசிய இறகுபந்து போட்டி, ஆந்திர மாநிலம் கடப்பாவில், சமீபத்தில் நடந்தது. இதில், பல மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவி ஸ்ரீ காயத்ரி தமிழக அணி சார்பில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.வெற்றி பெற்ற மாணவி மற்றும் பயிற்சியாளர் செந்திலை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன் மற்றும் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் வசந்தராஜ் பாராட்டினர்.

Share this