அரசு பள்ளி மாணவர்கள் நிவாரணம்

மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் 'கஜா' புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கி, நிவாரண பொருட்களை புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைத்தார்.உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கோமதி, ஆசிரியர்கள் பாபாஜி, தேவநாதன், செந்தமிழ்ச்செல்வன், செந்தில்நாதன், லீமாரோஸ், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிந்தனர். 40 ஆயிரம் மதிப்பிலான வேட்டி, சேலை,சட்டை, பிரட், பேஸ்ட், பிரஷ், நாப்கின் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன

Share this