பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ. ஆர்.டி., சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டம் அமலில் உள்ளது.


இதன் அடிப்படையில், மாநிலங்கள், தங்கள் பாடத் திட்டங்களை உருவாக்குகின்றன. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாணவர்களுக்கு அதிக சுமை தரும் பாடங்கள் உள்ளதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.சி.இ. ஆர்.டி.,யின் பாடத் திட்டத்தை பாதியாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாணவ - மாணவியர், வெறும் பாட புத்தக படிப்பு மட்டுமின்றி, திறன் வளர்க்கும் முயற்சிகளி லும் ஈடுபடுவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

Share this

0 Comment to " பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...