கல்வித்துறையில் தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா?

'கல்வித்துறையில் உள்ள மண்டல கணக்கு அலுவலர் அலுவலகங்களை முதன்மை கல்வி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்' என கல்வி அலுவலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.


சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை), கணக்கு அலுவலரின் (ஏ.ஓ.,) கீழ் செயல்படுகின்றன. இப்பணியிடம் உள்ளாட்சி துறையால் (தணிக்கை) நிரப்பப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் கட்டணம், திட்ட செலவினம், பணி நியமனம், ஆசிரியர் பணிப் பதிவேடு, சிறப்பு நிலை, தேர்வு நிலை பதவி உயர்வு, பணப் பலன் உட்பட பல நிலைகளில் இப்பிரிவால் தணிக்கை மேற்கொள்ளப்படும். 

பள்ளிகளில் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.மதுரை மண்டலத்தில் 17 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை ஒரு ஏ.ஓ., கண்காணிப்பது சிரமம். 'எனவே அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்துடன் இப்பிரிவை இணைக்க வேண்டும்' என அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'தொடக்க கல்வியில் தணிக்கை பிரிவு டி.இ.ஓ.,வின் கீழ் உள்ளது. தொடக்க கல்வி, மெட்ரிக் பிரிவு கலைக்கப்பட்டு சி.இ.ஓ.,வின் கீழ் ஒரே நிர்வாகமாக செயல்படுகிறது. அதுபோல் தணிக்கை பிரிவும் சி.இ.ஓ.,வின் கீழ் தனி பிரிவாக செயல்பட வேண்டும். நிர்வாகம் எளிமையாக இருக்கும்' என்றனர்.

Share this

0 Comment to " கல்வித்துறையில் தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு CEO கட்டுப்பாட்டில் வருமா?"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...