கஜா புயல் நிவாரணம்:ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குடிசை பகுதி மக்களுக்கு வழங்கல்

கஜா புயல் நிவாரணம் 


ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குடிசை பகுதி மக்களுக்கு வழங்கல் 

கண் தெரியாத பின்தங்கிய சமூக மக்களுக்கு நிவாரண பொருள் கொடுத்து உதவி 
 
காரைக்குடி - கஜா புயல் நிவாரணம் வழங்க காரைக்குடியை சார்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாதவன், சமூக ஆர்வலர் ஆதி ஜெகனாதன் ஆகியோரது குழுவினர்  அறந்தாங்கி அருகே உள்ள காசிம் புது பேட்டை கரம்பக்காடு, இளம் கரம்பகாடு குடிசை பகுதியில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை சமூகத்தின் மிகவும் பின்தங்கிய கம்மாய் பகுதிகளுக்குள் கஷ்டப்பட்ட  மக்களை தேடி சென்று உதவி செய்தார்கள்.கண் தெரியாத சிலருக்கும் உதவி செய்தனர்.அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும்,சமூக சிந்தனை உடையவர்களும் இதற்கான உதவிகளை செய்து இருந்தனர்.உதவி செய்யும் வாகனத்தில் ஜேம்ஸ் ,சிற்றரசு,ஷேக் மொஹைதீன்,சாதிக் ,சொக்கலிங்கம் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.


படம் விளக்கம் : காரைக்குடியை சார்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாதவன், சமூக ஆர்வலர் ஆதி ஜெகனாதன் ஆகியோரது குழுவினர்  அறந்தாங்கி அருகே உள்ள காசிம் புது பேட்டை கரம்பக்காடு, இளம் கரம்பகாடு குடிசை பகுதியில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை சமூகத்தின் மிகவும் பின்தங்கிய கம்மாய் பகுதிகளுக்குள் கஷ்டப்பட்ட  மக்களை தேடி சென்று உதவி செய்தார்கள்.கண் தெரியாத சிலருக்கும் உதவி செய்தனர்.

Share this