வரும் 15ம் தேதி தொடக்கம் சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 15ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில்(2015-2016, 2016-2017, 2017-2018ம் ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி நடந்தது.  தொடர்ந்து எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதற்கான விண்ணப்பதாரர் தற்காலிக பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு  அழைக்கப்பட்ட  விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வித் தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

Share this