அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு  முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.


அதில் சுமார் 150 கல்லூரிகளின் முதல் பருவத் தேர்வு எனும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


 தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அனுமதி கிடைக்காததால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பல்லாயிரகணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.


முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக கல்லூரிகள் செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் செலுத்தப்படாததாலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பை சில கல்லூரிகள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்காததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.


 எனினும் கல்லூரிகள் கட்டணம் செலுத்தியவுடன் ஒவ்வொரு கல்லூரிகளுக்கான முடிவுகளை வெளியிட்டு வருவதாக அண்ணா பலக்லைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments