குரூப் - 1' பிரதான தேர்வு தேதி மாற்றம்

 'குரூப் - 1' பிரதான தேர்வு மட்டும், ஜூலை இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 1ல் அடங்கிய பதவிகளுக்கான, முதல் நிலை தேர்வு, மார்ச், 3ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, அறிவிக்கப்பட்ட தேதியில், இந்த தேர்வு நடத்தப்படும். ஆனால், பிரதான தேர்வு, 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடக்கும்; இதற்கான பாட திட்டம், பின்னர் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, பிரதான தேர்வுக்கான பாட திட்டம், டி.என்.பி.எஸ்சி., யின், www.tnpsc.gov.in என்ற, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு, போதிய அவகாசம் தர வேண்டும் எனக்கருதி, பிரதான தேர்வை மட்டும், ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்த, ஆணையம் உத்தேசித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share this

0 Comment to "குரூப் - 1' பிரதான தேர்வு தேதி மாற்றம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...