கடந்த 2015 ஜூன் முதல்,
2017 மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் பணியமர்த்தப்பட்டு தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதி, மாவட்டத்தில் பணி யாற்றி வந்தால் அவர்களை வரும் 15-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி, மாவட்ட ஆட்சியர், முக்கிய துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம்நாடாளுமன்ற மக்களவைக் கான தேர்தல் விரைவில் அறிவிக் கப்பட உள்ளது.
வழக்கமான நடைமுறைப்படி, தேர்தல் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள், அலு வலர்கள் ஒரே பதவியில், பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் அவர்கள் பணியிட மாற்றம்செய்யப்பட வேண்டும். அதன்படி, காவல் துறை, வருவாய் மற்றும் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியிருந்தது.இதையொட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாஹுவும் அனைத்து துறை களின் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று தமிழக உள்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை செயலர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக டிஜிபி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஆணையத்துக்கு அறிக்கைஅக்கடிதத்தில், தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை குறிப்பிட்டுள்ளதுடன்.
கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி, 2015-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் பணியமர்த் தப்பட்டவர்கள், தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதியில் அல்லது ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வந்தால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக வரும் 15-ம் தேதிக்குள் பணியிடமாற்றம் செய்து, பெயர், பதவியை குறிப் பிட்டு ஆணையத்துக்கு அறிக்கைஅளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...