புழல்
புத்தாகரம் லட்சுமி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே
பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை பகுதியை சேர்ந்த அவரது
உறவினருக்கும் இன்று (10ம் தேதி) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு
இருந்தது. இந்நிலையில் மாணவி தனக்கு திருமணம் வேண்டாம் என்று படிக்கும்
பள்ளியின் தலைமையாசிரிடம் நேற்று தெரிவித்தார். இதையடுத்து பள்ளி
தலைமையாசிரியர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோருக்கு
தெரிவித்துள்ளார்.
உடனே மாவட்ட அதிகாரிகள் அண்ணா நகர் குழந்தை திருமணம் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அதிகாரிகள் மோரிஸ், மஞ்சுளா ஆகியோர் சிறுமியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என உறுதியானதால் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சிறுமியின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சிறுமியை மீட்டு சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். தனக்கு நடக்க இருந்த திருமணத்தை சிறுமியே முன்வந்து தடுத்து நிறுத்தியது அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தி உள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...