பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..?

செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன மாணவர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் சமீபத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுவும் இந்த வருடமே கட்டாயம் 5 மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. இதனால் மாணவர்கள் சற்று சிந்திக்க தொடங்கி உள்ளனர்

ஆனால் ஏன் இந்த பொது தேர்வு என்றால் மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்றும் நீட் தேர்வு முதலான அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள்  தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலேயே ஆயத்தப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

Share this

2 Responses to "பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..? "

  1. முதலில் தனியார் பள்ளிகளே இல்லாத சூழலை உருவாக்குங்கள். அப்போதுதான் ஏழை மாணவர்களும் வசதி படைத்த மாணவர்களோடு பழகும் சூழ்நிலை உருவாகும். அவர்களை போன்று வாழ வேண்டும் என்ற உயர்வான குறிக்கோள் உருவாகும். பள்ளிகளை வசதிக்கு ஏற்றாற்போல் தரம் பிரித்துவிட்டு பிஞ்சி மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். சமுதாயத்தில் மாற்றம் எப்போதுவரும்?

    ReplyDelete
  2. ஆனால் அவர்களை பாஸ் பண்ணியே விட வேண்டும் என்று ரீடெஸ்ட் இதே ஆட்கள் வைக்க சொல்லாமல் இருந்தால் நல்லது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...