சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச கவுன்சலிங் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான
ஹால்டிக்கெட்களை வெளியிட்டுள்ளது. மேலும், மாண வர்கள் மற்றும் பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்கவும் உதவிக்குழு அமைக்கப்பட்டுள் ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம்வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இதற்கிடையே மாண வர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை நடப்பு கல்வியாண்டு முதல் முன் கூட்டியே நடத்தி முடிக்க முடிவானது. 87 நிபுணர்கள் அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு கள் பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. 10-ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 21 முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தேர்வு எழு தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச கவுன்சலிங் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்காக கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் என 87 நிபுணர்கள் கொண்ட உதவிக்குழு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வரும் ஏப்ரல் 4-ம் தேதி வரை செயல்படும். அதன்படி 1800118004 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அல்லது counselling.cecbse@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரியில் மாணவர்கள், பெற்றோர் கள் தேர்வு தொடர்பான சந்தேகங் கள், பாடம் குறித்த விளக்கங்கள், தேர்வு பயம், மனஅழுத்தம் உட்பட பல்வேறு சிக்கல்கள் குறித்துக் கேட்டு தெளிவு பெறலாம். 

இதுதவிர தேர்வை எதிர்கொள்வது தொடர்பான வீடியோக்களும் www.cbse.nic.in இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. பதிவிறக்கம் இதற்கிடையே தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் சிபிஎஸ்இ இணையத் தில் (www.cbse.nic.in) வெளியிடப் பட்டுள்ளன. இதில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பாஸ் வேர்டு பயன்படுத்தி ஹால்டிக் கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Share this