புதுக்கோட்டை
மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவணத்தாங்கோட்டை
மேற்கு நடுநிலைப்பள்ளியில் கணினி ஆய்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர்
ப. கலைச்செல்வி
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி
வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் அவர்கள் கலந்துகொண்டு
ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். பள்ளிக்கு கணினிகள் நன்கொடை வழங்கிய
பேராசிரியர் முனைவர் திரு. தங்க ரவி சங்கர் அவர்களுக்கு நன்றி
தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கராத்தே சிலம்பம் பயிற்சிக்கான
சிறப்பு ஆடைகள் வழங்கப்பட்டது. ஆடைகளை அன்பளிப்பாக வழங்கிய அரசு தோல்
மருத்துவர் டாக்டர். மனோகரி அவர்களுக்கும், இளம்பருதி அவர்களுக்கும் நன்றி
தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு வாகனம் வாங்கும் திட்டத்திற்காக
வாடிகாட்டை சேர்ந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் k.விஸ்வநாதன்,
சி.
பரமசிவம் மற்றும் அறந்தாங்கி நண்பர்களும் ரூபாய் 22 ஆயிரத்தை பள்ளிக்கு
நன்கொடையாக வழங்கினர். ஆசிரியர் திருமதி .ஆனந்தி அவர்கள் நன்றியுரை கூற
மாணவர்களின் கலைநிகழ்ச்சியோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...