கூட்டுறவு பட்டயப்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 20வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவங்கப்பட உள்ளது.விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2018-19ம் ஆண்டிற்கான 20வது அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி துவங்கப்பட உள்ளது.இப்பயிற்சிக்கு பழைய பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர் பணி நியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக (அல்லது) கருணை அடிப்படையில் (அல்லது) அரசு பதிவாளர் உத்தரவுப்படி விவரம் குறிப்பிடவேண்டும்.அலுவலக வார விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம், கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.இப்பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவம் பிப்ரவரி 1 முதல் 28ம் தேதி வரை அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மார்ச் 7ம் தேதி பயிற்சி துவங்கப்படவுள்ளது.விபரங்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டி எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04146 259467 தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "கூட்டுறவு பட்டயப்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...