வரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் - வட்டாரக்கல்வி அலுவலர்கள் சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

பள்ளிக்கல்வித்துறையில் பல சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாலையில் அரை மணி நேரமாவது குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தேவை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்கான சூழலை அரசு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

மேலும் வரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Share this

1 Response to "வரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் - வட்டாரக்கல்வி அலுவலர்கள் சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு! "

  1. ஏற்கனவே உள்ளதை திருப்பி விளக்குறாரா? இவர் சரியான அமைச்சர் தான்!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...