(S.Harinarayanan, PGT, GHSS Thachampet )
தாத்தா,
பாட்டிகளுடன், வளர்ந்த குழந்தைகள் இன்று ஸ்மார்ட் போன்களுடன்தான் அதிக
நேரத்தைச் செலவிடுகிறார்கள். குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவதற்கும்
அடம்பிடித்தால் சமாதானப்படுத்துவதற்கும் இரவு தூங்க வைக்கவும் தங்களைத்
தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கவைக்கவுமென எல்லாவற்றுக்கும் ஒரே
தீர்வாக ஸ்மார்ட் போன்களையே பல பெற்றோர் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற
குறுகிய கால ஆசுவாசத்துக்காகக் குழந்தைகளின் மன நலனையும் உடல் நலனையும்
புறக்கணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை பெற்றோர் உணர்வதில்லை.என் குழந்தை
எப்போதும் செல்போனில்தான் விளையாடும்’
அவனுக்கு
செல்போன் என்றால் உயிர். இரவில்கூட பக்கத்தில் வைத்துக்கொண்டுதான்
தூங்குவான்’, என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் ‘ஆன்’ செய்து பார்த்து
விடும், செல்போனை கையில் கொடுத்தால்தான் என் குழந்தை சாப்பிடும்’
... இப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றி மற்றவர்களிடம் பெருமிதம் பொங்க பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இவை.
இப்படி பேசும் பெற்றோர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த செல்போன்களால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள்
ஏற்படுகின்றன என்பது தெரிவதில்லை.
செல்போன்
ஒரு தகவல் தொடர்பு சாதனம். குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை
அல்ல அது. குழந்தைகள் அதை ஒரு விளையாட்டு பொருள்போல் நினைத்து
பயன்படுத்துவது தவறான பழக்கம்.
குழந்தைகளின் செல்போன் ஆர்வம்:
பச்சிளம்
குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பல தாய்மார்கள் ஸ்மார்ட் போனைப்
பயன்படுத்துகிறார்கள். அப்போது போனில் இருந்து வரும் வெளிச்சம்
குழந்தைகளைக் கவரும். இந்த நடவடிக்கைதான் குழந்தைக்கு ஸ்மார்ட் போன்
குறித்த ஆர்வத்தை முதலில் தூண்டுகிறது.
ஆறு
மாதம் ஆகும்போது குழந்தைக்கு நன்றாகப் பார்வை தெரியும். அப்போது ஸ்மார்ட்
போன்களில் அசையும் உருவங்களையும் அவை கவனிக்கின்றன. குழந்தைக்கு மூன்று
வயதுக்குள் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்.
சிந்திக்கும் திறன் பாதிக்கும்:
செல்போனிலிருந்து
வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் உடல் உறுப்புகளை தாக்கும் அபாயம்
நிறைந்தவை. முக்கியமாக மூளை வளர்ச்சியடையும் சிறு பருவத்தில் கதிர்வீச்சு
குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். அதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல்
குறையும். உடலில் ஹார்மோன்கள் சுரப்பது இயல்புக்கு மாறாகிவிடும். அதனால்
குழந்தைகள் பொறுமையை இழந்து, அடிக்கடி பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக
சிந்திக்கவும், செயல்படவும் முடியாமல் தடுமாறுவார்கள். கோபம், ஆத்திரம்
எல்லாம் அதிகரிக்கும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் குழந்தைகளின்
கேள்வித்திறனும் பாதிக்கும். இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர்கள்கூட
மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும், செல்போன்
கதிர்வீச்சுகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
‘அமெரிக்கன்
அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் ஆய்வு
முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளின் செல்போன் ஆர்வத்தை பெருமையோடு பேசிக்கொள்கிறார்கள்.
செல்போனில்
முடங்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஓடி, ஆடி விளையாட விருப்பம் இல்லை.
அதனால் அவர்களது உடல்வளர்ச்சியோடு சேர்ந்து மனவளர்ச்சியும்
பாதிக்கப்படுகிறது..’’ இவ்வாறு, தகவல்களை தருகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஆபத்தான நண்பன் :
டீன்–ஏஜ்
பருவத்தினரின் நிலையும் மோசமாகத்தான் இருக் கிறது. அவர்கள் செல்போனை தகவல்
தொடர்பு சாதனமாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கைத் துணை என்ற நிலைக்கு
கொண்டுபோய்விடுகிறார்கள். ஆய்வு முடிவுகளோ அவைகள் ‘ஆபத்தான நண்பன்’ என்று
குறிப்பிடுகிறது.
மனநோய்க்கு வழிவகுக்கும்...
தன்னிச்சையாக
செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia)
என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே,
செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து
அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில்
இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம்,
அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில்
ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக
மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்... போன்றவை.
*
பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome)
எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன்
அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால்,
அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.
செல்போனில்
வரும் வீடியோ கேம்களால் குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் உண்டாகிறது. பல
சிறுவர்கள், ஆபாச வீடியோக்களை பார்க்கும் அபாயமும் இருக்கிறது.
அதனால் செல்போனை தவிர்த்து, பெற்றோருடனும், உறவினர்களுடன் கலந்து பழக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்,”
Good
ReplyDelete