அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!+2 படிக்கும் திறமையான ஏழை மாணவர்களை அகரம் அறக்கட்டளைக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அரசுப் பள்ளி மாணவர்கள், கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளாகத் துணைபுரிகிறது. பெற்றோரை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடரமுடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுவரை 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள்.
2019-ம் ஆண்டு +2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அகரம் அறக்கட்டளை நிறுவனத்தின் தொடர்பு எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share this

1 Response to "அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!"

Dear Reader,

Enter Your Comments Here...