Whatsapp Private Chat : இன்று உலகத்தில் உள்ள அநேக ஸ்மார்ட்போன் பயனாளிகள்
பயன்படுத்தும் பிரபல குறுஞ்செய்தி ஆப் என்றால் அது வாட்ஸ்ஆப் செயலிதான்.வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க தனிநபர் குறுஞ்செய்தி சேவைகளுக்காக மட்டுமே
உருவாக்கப்பட்டது. எக்காலத்திலும் பப்ளிக் கான்வர்சேசன் என்ற நிலைக்கு
வாட்ஸ்ஆப் அப்டேட் ஆகாது என டெல்லியில் நடந்த நிகழ்வொன்றில் திட்டவட்டமாக
அறிவித்திருக்கிறார் வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரி மேட் ஜோனெஸ்.
Whatsapp Private Chat - ப்ராட்காஸ்ட்ர் ப்ளாட்ஃபார்ம் இல்லை
இந்தியாவில், போலி செய்திகள் மற்றும் தகவல்கள் பரவலால் பல்வேறு இடங்களில்
வன்முறைகள், கொலைகள் போன்றவை அரங்கேறி வந்ததைத் தொடர்ந்து, வாட்ஸ்ஆப்
செயல்பாடுகள், ஃபார்வர்ட் மெசேஜ்கள் மற்றும் இதர பயன்பாடுகளை கட்டுப்படுத்த
வேண்டும் என்ற இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நடவடிக்கைகளை
வாட்ஸ்ஆப் மேற்கொண்டு வருகிறது.
"பர்சனல் கான்வெர்சேசன்ஸ்" -க்காக மட்டுமே இந்த செயலி உருவாக்கப்பட்டது.
90% அளவிற்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் அனைத்தும் ஒன் - டூ - ஒன் ஆகவே
அமைகிறது.
மேலும் 256 நபர்கள் வரை க்ரூப்பிற்கான லிமிட் இருந்தாலும் நிறைய குழுக்கள்
வெறும் 10 நபர்களை மட்டுமே உள்ளடக்கிய குழுவாக செயல்படுகிறது என்று அவர்
தெரிவித்தார்.
பப்ளிக் கான்வர்சேசனுக்காக இந்த செயலியை நாங்கள் உருவாக்கவில்லை. வாட்ஸ்ஆப்
ஒன்றும் மெகா போன் கிடையாது என்றும் திட்டவட்டமாக அவர்
அறிவித்திருக்கின்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...